திமுக அரசுக்கு உச்ச நீதிமன்றம் சவுக்கடி - எல். முருகன்
Oct 13, 2025, 04:56 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திமுக அரசுக்கு உச்ச நீதிமன்றம் சவுக்கடி – எல். முருகன்

 கரூர் பலி சம்பவத்தில் உண்மை வெளிவரட்டும் - எல். முருகன்

Web Desk by Web Desk
Oct 13, 2025, 03:04 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கரூர் பலி சம்பவ வழக்கில் திமுக அரசுக்கு உச்ச நீதிமன்றம் சரியான சவுக்கடி கொடுத்துள்ளது என்று மத்திய அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

திமுக அரசின் அவல ஆட்சியால் பெரும் துயரத்திற்கு ஆளாகியுள்ள தமிழக மக்கள் கடும் கொந்தளிப்பில் இருக்கின்றனர்.

இதனால் அச்சத்தில் இருக்கும் திமுக அரசு, எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டங்களுக்கு உரிய பாதுகாப்பு கொடுக்காமலும், அனுமதி கொடுக்காமலும் குழப்பங்களை செய்து வருவது அனைவரும் அறிந்த ஒன்றே.

இந்தச் சூழலில் தான், கரூரில் கடந்த மாதம் 27-ம் தேதி தவெக தலைவர் மேற்கொண்ட பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்தக் கூட்டத்திற்கு அனுமதி, இடம் தேர்வு செய்வது, பாதுகாப்பு உட்பட அனைத்திலும் காவல்துறை பொறுப்புடன் நடந்து கொள்ளவில்லை. கரூர் உயிர் பலி சம்பவத்தில் தனது பொறுப்பை சரியாக நிறைவேற்றாத திமுக அரசு தவெகவுக்கு எதிராக வன்ம பிரசாரமும் செய்து வருகிறது.

திமுக அரசின் விசாரணையில் உரிய நீதி கிடைக்குமா என்ற கவலை அனைவருக்கும் இருந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் தற்போது திமுக அரசுக்கு உச்ச நீதிமன்றம் சரியான சவுக்கடி கொடுத்துள்ளது.

கரூர் வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கவும் உத்தரவிட்டுள்ளது வரவேற்கத்தக்கது.

இதன் மூலம் கரூர் கொடூர சம்பவத்தில் உண்மை விரைவில் வெளிவரும்; சம்பந்தப்பட்டவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவர் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்று எல். முருகன் தெரிவித்துள்ளார்.

Tags: Supreme Court slaps DMK government - L. Murugankarur issuesupreme courtDMKtvk vijaytvktvk vijay campaign
ShareTweetSendShare
Previous Post

அதிவேகமாக 5000 ரன்களை கடந்து ஸ்மிருதி மந்தனா சாதனை!

Next Post

காபூல் – டெல்லி இடையே விமான சேவைகளை அதிகரிக்க உள்ளோம் : வெளியுறவுத்துறை அமைச்சர் அமீர்கான் முத்தாகி

Related News

தவெக மாவட்ட செயலாளர் உள்பட 2 பேரின் ஜாமின் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

ஒன்றும் செய்யாத தவெகவினரை தீவிரவாதிகள் போல காவல்துறையினர் தடியடி நடத்தினர் – ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு!

விருதுநகர் : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு கடைகளில் குவியும் மக்கள்!

வாலாஜா தடுப்பணையில் வெள்ளப்பெருக்கு!

நாமக்கல்லில் சிறுநீரக மோசடி விற்பனை – இடைத்தரகர்கள் கைது!

சேலம் : ஆர் எஸ் எஸ் அமைப்பின் நூறாவது ஆண்டு விழா!

Load More

அண்மைச் செய்திகள்

லக்னோவில் இனிப்பு தயாரிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த பொருட்கள் மீது ஓடிய எலி!

அரிய தாதுக்கள் ஏற்றுமதிக்கு தடை : சீனாவிற்கு 100% வரி விதிப்பு – ருத்ரதாண்டவமாடும் ட்ரம்ப!

பாக்.,கிற்கு ட்ரம்ப் கொடுத்த ட்விஸ்ட் : “AIM-120 ஏவுகணைகள் வழங்கப்படமாட்டாது”!

மேற்கு வங்கத்தில் தொடரும் பாலியல் கொடூரம் : கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு!

பெங்களூரு : மாட்டு வண்டியில் சென்று சொகுசு காரை வாங்கிய விவசாயி!

ஆப்கானிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதல் – பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 58 பேர் உயிரிழந்ததாக தகவல்!

அமெரிக்கா சீனாவிற்கு தீங்கு விளைவிக்க விரும்பவில்லை – டிரம்ப்

மடகாஸ்கர் : போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக களமிறங்கிய சில ராணுவ வீரர்கள்!

காபூல் – டெல்லி இடையே விமான சேவைகளை அதிகரிக்க உள்ளோம் : வெளியுறவுத்துறை அமைச்சர் அமீர்கான் முத்தாகி

திமுக அரசுக்கு உச்ச நீதிமன்றம் சவுக்கடி – எல். முருகன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies