கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேருக்கும், மறைந்த மூத்த அரசியல் தலைவர்களுக்கும் சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழகச் சட்டப்பேரவை கூட்டத்தொடரின் முதல் நாளில் பேரவைத் தலைவர் அப்பாவு இரங்கல் தீர்மானம் வாசித்தார். கரூர் கூட்டநெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாகக் கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன், ஜார்கண்ட் முன்னாள் முதல்வர்ச் சிபுசோரனுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மறைந்த நாகலாந்து ஆளுநர் இல.கணேசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டிக்கும் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.
மேலும், தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் பீலா வெங்கடேசன், அதிமுகச் சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி ஆகியோருக்கும் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைதொடர்ந்து மறைந்தவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.