எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது பல்வேறு வழக்குகளில் சிபிஐ விசாரணைக் கோரிய முதலமைச்சர் ஸ்டாலின், கரூர் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்? எனப் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்துச் சென்னை சைதாப்பேட்டையில் அவர் அளித்த பேட்டியில்
கரூர் கூட்ட நெரிசல் வழக்கைச் சிபிஐ விசாரணைக்கு மாற்றியதில் மகிழ்ச்சி என்றும் கரூர் சம்பவத்தில் முதன் முறையாகச் சிபிஐ விசாரணைக் கோரியது பாஜகதான் என்றும் அண்ணாமலை குறிப்பிட்டார்.
தமிழக அரசு அமைத்த ஒரு நபர் ஆணையம் மீது எனக்கு நம்பிக்கை இல்லை என்றும் கரூர் சம்பவத்தில் யாருக்குத் தொடர்பு இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அண்ணாமலை கூறினார்.
எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது சிபிஐ விசாரணைக் கோரிய ஸ்டாலின் தற்போது எதிர்ப்பது ஏன்? என்று அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
கரூர் வழக்கைச் சிபிஐ விசாரிப்பதில் சீமானுக்கு ஏன் பதற்றம் என்று தெரியவில்லை என்றும் 2 பேரிடம் பொய் சொல்லிக் கையெழுத்து பெற்றது யார் என்பதை நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்று அண்ணாமலை கூறினார்.