தவெக கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பான வழக்கை விசாரிப்பதற்காக ஐபிஎஸ் தலைமையிலான சிபிஐ அதிகாரிகள் குழுவினர் கரூர் வந்துள்ளனர்.
கரூர் மாவட்டம், வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27ஆம் தேதி நடந்த தவெக பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் 5 வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட்டது.
அதன்படி, ஐபிஎஸ் பிரவீன் குமார் தலைமையில், சிபிஐ அடங்கிய அதிகாரிகள் குழுவினர் கரூர் வந்துள்ளனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான சுற்றுலா மாளிகையில் சிபிஐ அதிகாரிகள் தங்கி உள்ளனர்.
இதனை தொடர்ந்து, கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக இதுவரை நடத்திய விசாரணை தொடர்பான ஆவணங்களை சிபிஐ அதிகாரிகளிடம் சிறப்பு புலனாய்வு குழுவினர் ஒப்படைத்தனர்.
ஆவணங்களை பெற்றுக்கொண்ட சிபிஐ அதிகாரிகள், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து விசாரணையை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.