ராஜஸ்தானில் பள்ளி வேனும், காரும் மோதிக் கொண்ட விபத்தில் மாணவிகள் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ராஜஸ்தானின் கோட்டா நகரில் பள்ளி வேனும், காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் பள்ளி வேன் சாலையோர பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்தது. விபத்தில் காரும் கடுமையாகச் சேதமடைந்தது.
இதையடுத்து மாணவர்கள் உட்பட காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்தக் கோர விபத்தில் மாணவிகள் இருவர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
















