பீகார் சட்டப்பேரவை தேர்தல் முடிவு - என்டிஏ கூட்டணி தொடர்ந்து முன்னிலை!
Nov 14, 2025, 04:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பீகார் சட்டப்பேரவை தேர்தல் முடிவு – என்டிஏ கூட்டணி தொடர்ந்து முன்னிலை!

Web Desk by Web Desk
Nov 14, 2025, 04:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பீகார் சட்டப்பேரவை தேர்தலில் பெரும்பான்மைக்கு தேவையான இடத்திற்கு மேல் தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலையில் உள்ளதால் அக்கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கிறது.

பீகாரில் உள்ள 243 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த 6 மற்றும் 11ம் தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற்றன. இந்தத் தேர்தல்களில் மொத்தம் 67 புள்ளி 13 சதவீத வாக்குகள் பதிவாகின. இதுதான் பீகாரில் அதிகபட்ச வாக்குப்பதிவு எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

இந்தநிலையில் தேர்தலில் பதிவான வாக்குகள் 46 மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் காலை 8 மணிக்கு எண்ணும் பணி தொடங்கியது. இதில் தொடக்கம் முதலே பாஜக கூட்டணி முன்னிலை வகித்து வந்தது. தற்போதைய நிலவரப்படி, ஆட்சி அமைப்பதற்கு தேவையான இடங்களையும் தாண்டி 200-க்கும் மேற்படஇடங்களுக்கு மேல் தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலையில் உள்ளது.

அதில் பாஜக 95 இடங்களிலும் முதலமைச்சர் நிதிஷ்குமாரியின் ஐக்கிய ஜனதா தளம் 84 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. இந்தியா கூட்டணி வெறும் 32 இடங்களின் மட்டுமே முன்னிலையில் உள்ளது. அதில் ராஷ்டிரிய ஜனதா தளம் 25 இடங்களிலும் காங்கிரஸ் 1 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது..

இதனிடையே கருத்து கணிப்பில் கூறப்பட்ட இடத்திற்கு மேல் என்டிஏ கூட்டணி முன்னிலையில் உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி 130 முதல் 160 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் எனப் பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் கூறப்பட்டன.

ஆனால் எதிர்பார்த்ததைவிட தேசிய ஜனநாயக கூட்டணி 200 இடங்களுக்கு மேல் முன்னிலையில் உள்ளது. இதேபோல் மகாகத்பந்தன் கூட்டணி 73 முதல் 91 இடங்களில் வெற்றி பெறும் எனக் கூறப்பட்ட நிலையில், 29 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது.

அதேபோல, பீகார் சட்டப் பேரவை தேர்தலில் போட்டியிட்ட 101 தொகுதிகளில் 95 இடங்களில் பாஜக முன்னிலையில் உள்ளது. இதனால் அம்மாநிலத்தில் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவாகி உள்ளது. கூட்டணி கட்சியான நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தள கட்சி 84 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

இதனிடையே தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலையில் உள்ளதை அடுத்து பாட்னாவில் உள்ள ஐக்கிய தன தள கட்சி தலைமை அலுவலகத்தில் அக்கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். கட்சி கொடியை அசைத்தும், முதலமைச்சர் நிதிஷ்குமாரின் புகைப்படத்தை ஏந்தியும் அவர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கித் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இதேபோல் பீகாரில் பாஜக தனிப் பெரும் கட்சியாக உருவானதை அடுத்து தலைநகர் பாட்னாவில் அக்கட்சியின் தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பிரதமர் மோடியின் உருவம் கொண்ட அலங்கரிக்கப்பட்ட தேரில் அவர்கள் ஊர்வலமாக சென்றனர். மேலும் பாஜக பெண் தொண்டர்கள் மேள, தாளங்கள் முழங்கியும் பாட்டு பாடியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags: bihar election 2025Bihar Assembly Election Results - NDA Alliance Continues to Leadஎன்டிஏ கூட்டணிபீகார் சட்டப்பேரவை தேர்தல் முடிவுதேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை
ShareTweetSendShare
Previous Post

புல்லட் ரயில் நிலையத்தை நாளை பார்வையிடுகிறார் பிரதமர் மோடி!

Next Post

பீகாரில் மீண்டும் ஆட்சி அமைக்கிறது என்டிஏ கூட்டணி – பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

Related News

புல்லட் ரயில் நிலையத்தை நாளை பார்வையிடுகிறார் பிரதமர் மோடி!

பீகார் மக்கள் ‘இண்டி’ கூட்டணியை முற்றிலுமாக புறக்கணித்துவிட்டார்கள் : எல். முருகன் 

டெல்லி வந்தடைந்த திரெவுபதி முர்மு!

டெல்லி கார் குண்டுவெடிப்பு – உமர் முகமது நபியின் இல்லம் தரைமட்டம்!

பிஹாரில் ஜனநாயக முறைப்படி தேசிய ஜனநாயகக் கூட்டணி வென்றுள்ளது – தமிழக பாஜக

மகாராஷ்டிரா : கார் மீது லாரி மோதிய விபத்து – 6 பேர் உயிரிழப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பீகாரில் மீண்டும் ஆட்சி அமைக்கிறது என்டிஏ கூட்டணி – பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

பீகார் சட்டப்பேரவை தேர்தல் முடிவு – என்டிஏ கூட்டணி தொடர்ந்து முன்னிலை!

விழுப்புரம் மாவட்டத்தில் யூரியா உரத்திற்கு கடும் தட்டுப்பாடு – விவசாய சங்கத்தினர் குற்றச்சாட்டு!

நெடுஞ்சாலையில் தரையிறங்கிய சிறியரக விமானம் அப்புறப்படுத்தப்பட்டது!

இருசக்கர வாகன விற்பனை கடை முன்பு நகராட்சி குப்பைகளை கொட்டியதாக புகார்!

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மணிமகுடத்தில் மற்றுமொரு மாணிக்கம் – நயினார் நாகேந்திரன்

சென்னை : கல்லூரி ஆசிரியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!

மதுரை அரசு மருத்துவமனை ஒப்பந்த ஊழியர்கள் 3 பேர் பணிநீக்கம்!

சுசீந்திரம் கோயில் குளத்தை பாரம்பரியம் மாறாமல் சீரமைக்க வேண்டும் – விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு வலியுறுத்தல்!

ராமேஸ்வரம் அரிச்சல்முனை கடற்கரையில் வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டு கொண்டாட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies