தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர் நடவடிக்கைக்கு போதுமான கால அவகாசம் உள்ளதாக தெரிவித்துள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி படிவங்களை வழங்கும் பணியில் நான்காம் வகுப்பு படித்தவர்களை தமிழக அரசு ஈடுபடுத்துவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எஸ்.ஐ.ஆர் பணிகளில் தமிழக அரசு தலையிடுகிறது என தெரிவித்தார்.
தமிழக அரசால் நியமிக்கப்பட்ட பி.எல்.ஓ-க்கள் 4வது வரை தான் படித்துள்ளார்கள் எனறும், குறைந்த கல்வி கற்றவர்கள் எப்படி படிவத்தை உரிய முறையில் வழங்குவார்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
எஸ்ஐஆர் பணிகள் முறையாக நடக்கக்கூடாது என பல அதிகாரிகள் செயல்படுவதாக தகவல் கிடைத்துள்ளதாகவும், “எஸ்.ஐ.ஆர் பணிகளை நிறுத்த ஆளும் கட்சியினர் பல்வேறு முயற்சிகளை கையிலெடுப்பதாகவும் அவர் சாடினார்.
மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் தேர்தல் பணிக்கான பணியாளர்கள் நியமிக்க படுகின்றனர் என்றும், வாக்காளர்களின் கையொப்பத்தை இடுவது திமுகவி-னருக்கு கைவந்த கலை என்றும் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.
















