சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ஆடிட்டர் பொன்ராஜ் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
சென்னையில் ஆடிட்டர்களை குறிவைத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில், சட்டவிரோத பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் பேரில், கோடம்பாக்கத்தில் உள்ள ஆடிட்டர் பொன்ராஜ் இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
அதேபோல திருவொற்றியூர், துரைப்பாக்கத்தில் உள்ள ஆடிட்டர்களின் இல்லங்களிலும் சோதனை நடைபெற்றது.
















