தமிழகத்தில் எப்போது தேர்தல் நடைபெற்றாலும் சந்திக்கத் தயாராக இருப்பதாகப் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் செய்தியாளர்களிடம் பேசியவர்,
தமிழகத்தில் நாளையே சட்டமன்ற தேர்தல் நடைபெற்றாலும் அதனை எதிர்கொள்ளத் தயார் என்றும் தமிழகத் தேர்தல் பொறுப்பாளர்ப் பியூஸ் கோயல் வருகிற 23-ந் தேதி தமிழகம் வர வாய்ப்பு இருப்பதாக அவர் கூறினார்.
திமுகவின் 5 ஆண்டு கால ஆட்சியில் சொத்துவரி உள்ளிட்டவைகள் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டியவர், தமிழகம் முழுவதும் பல்வேறு பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றது என்று நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டார்.
ஜன.9-ம் தேதி யாத்திரை நிறைவடைகிறது என்றும் பிரதமர் அல்லது உள்துறை அமைச்சர் பங்கேற்க தேதி கேட்கப்பட்டுள்ளது என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
















