நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெற்றதுடன் இரு அவைகளும் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 1-ம் தேதி தொடங்கியது. கூட்டத்தொடரின் முதல் இரண்டு நாட்கள் அமளியில் முடிந்தாலும், 3-ம் தேதி முதல் ஆக்கபூர்வமாக நிகழ்வுகள் நடைபெற்றன.
வந்தே மாதரம், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், திருப்பரங்குன்றம் விவகாரம் ஆகியவை குறித்தும் காரசார விவாதங்கள் நடைபெற்றன.
முக்கியமாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் பெயரை விபி-ஜி ராம் ஜி திட்டம் என மாற்றி நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேறியது. இந்நிலையில் இன்று அவை கூடியதும் வந்தே மாதரம் பாடல் இசைக்கப்பட்ட பிறகு அவை ஒத்திவைக்கப்பட்டது.
















