சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் , தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வாக்கு சதவிகிதம் 36 ஆக உயர்ந்திருப்பதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்,
கோபி செட்டிப்பாளையத்தில், தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், 41% ஆக இருந்த திமுகவின் வாக்கு சதவிகிதம் 30% ஆக சரிந்துள்ளது என தெரிவித்தார்.
41% ஆக இருந்த திமுகவின் செல்வாக்கு 30% ஆக சரிந்துள்ளது என்றும் NDA கூட்டணி வாக்கு சதவிகிதம் 36% ஆக உயர்ந்துள்ளது என்றும் கூறினார்.
டாஸ்மாக்கை படிப்படியாக குறைப்போம் என்று கூறிய திமுக அரசு, படிப்படியாக எண்ணிக்கையை கூட்டியது என்றும் தீபாவளி, பொங்கலுக்கு எத்தனை கோடி ரூபாய்க்கு மது விற்பனையை உயர்த்தலாம் என்பதே திமுக அரசின் திட்டம் என்றும் அவர் கூறினார்.
தேர்தல் அறிக்கைகளில் கூறிய எந்த வாக்குறுதியையும் திமுக அரசு நிறைவேற்றாமல் மக்களை வஞ்சித்துள்ளது எனறும், திமுக அமைச்சர்கள் 17 பேர் மீது ஊழல் குற்றச்சாட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.
திமுக ஆட்சியில் 42 லாக்கப் மரணங்கள், 700-க்கும் மேற்பட்ட படுகொலைகள் நடந்துள்ளது என்றும், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் 15 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
100 நாள் வேலை திட்டத்தை 125 நாட்களாக மத்திய அரசு உயர்த்தியுள்ளதாகவும் நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டார்.
















