கொங்கு மண்டலம், சோழ மண்டலம் மட்டுமல்ல… எல்லா இடங்களிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி வாகை சூடும் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உறுதிபட தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவில் மக்களிடையே உரையாற்றிய அவர், முதலமைச்சர் ஸ்டாலின் தமிழை வைத்து பிழைப்பு நடத்துவதாக தெரிவித்துள்ளார்.
மகனை முதலமைச்சர் ஆக்க கூட்டணியை ஸ்டாலின் இறுக்கி பிடித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
திமுக ஆட்சி மீது மக்களுக்கு வெறுப்பு உள்ளதாகவும் அவர் கூறினார் கேரளாவுக்கு கனிம வளம் அனுப்பப்பட்டு, கழிவு பொருட்கள் இறக்குமதி செய்யப்படுவதாகவும் நயினார் குறிப்பிட்டார்.
















