முதலமைச்சர் ஸ்டாலின் சாக்கு போக்கு சொல்லாமல், கஞ்சா மற்றும் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என தோல்வியை ஒப்புக் கொள்ள வேண்டும் என்று பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
வேலூரில் செய்தியாளர்களிடம பேசிய அவர், தமிழகத்தையும், காவல்துறையை நிர்வாகம் செய்ய முடியவில்லை என ஸ்டாலின் கூறினால் மத்திய அரசு பார்த்துக் கொள்ளும் என கூறினார்.
போதை கலாச்சாரத்தை ஒழிக்க தவறிய முதலமைச்சர் மத்திய அரசு மீது பழி சுமத்துவது நியாயமல்ல என்றும் அவர் தெரிவித்தார்.
முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இந்திய அரசியல் சட்டம் குறித்து பாடம் எடுக்க வேண்டும் என்றும், “முதலமைச்சர்கள் தான் மாநிலத்திற்குள் நடைபெறும் போதை பொருட்கள் கடத்தல் தடுக்க வேண்டும் என்றும் கூறினார்.
“முதலமைச்சர் ஸ்டாலின் தனி உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்றும், ஜிங் ஜாங் போடுபவங்களை தவிர மக்களுக்காக பேச காங்கிரஸில் யாரும் இல்லை என்றும் அண்ணாமலை குறிப்பிட்டார்.
















