தீபத்தூணில் தீபமேற்ற அனுமதித்த உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை விமர்சித்த அமைச்சர் ரகுபதி, சுடுகாட்டில்தான் பிணத்தை எரிக்க வேண்டும் என பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இதற்கு பதிலளித்த அண்ணாமலை, நாவடக்கமின்றி திரியும் திமுகவினருக்கு, தமிழக மக்கள் விரைவில் பாடம் புகட்டுவார்கள் என தெரிவித்துள்ளார்.
மேலும், நூறாண்டுகளாக நிலவி வரும் தமிழக மக்களின் ஆன்மீக மரபுகளை அவமதிப்பதும்,
இந்துகளின் வழிபாட்டு உரிமை, பண்பாடு போன்ற அனைத்தையும், திமுகவினர் தொடர்ந்து கேலி செய்து வருவதும்,
திமுக அரசின் இந்து விரோத மனநிலை மீண்டும் மீண்டும் நிரூபணம் செய்தவதாகவும் கூறியுள்ளார்.
மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்த முயலும் திமுகவினரின் செயல்பாடுகளை நீதிமன்றம் சுட்டிக்காட்டினால், நீதிமன்ற தீர்ப்பையே திமுகவினர் அவமதிக்கின்றனர் என்றும் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
















