ஜம்மு – காஷ்மீர் வழியாக பாகிஸ்தானுக்குள் பாயும் செனாப் நதியின் குறுக்கே அணைகள் கட்டும் பணிகளை மத்திய அரசு முடுக்கிவிட்டுள்ளது.
பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய கோழைத்தனமான தாக்குதலைத் தொடர்ந்து, அந்நாட்டுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை மத்திய அரசு நிறுத்தி வைத்தது.
இந்தியா – பாகிஸ்தான் இடையே 1960ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தம், கார்கில் போர், மும்பை தாக்குதலின் போதும் நிறுத்தப்படவில்லை.
பாகிஸ்தானில் வாழும் லட்சக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்ற மனிதாபிமானத்தின் அடிப்படையில் இந்த ஒப்பந்தத்தில் கை வைக்காமல் மத்திய அரசு தவிர்த்து வந்தது.
ஆனால் பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை முதன்முறையாக நிறுத்தி வைத்த மத்திய அரசு, அவற்றின் குறுக்கே அணைகளை கட்ட முடிவு செய்து, அந்த பணிகளை துரிதப்படுத்தியுள்ளது.
இந்த பணிகள் 2028ம் ஆண்டுக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அணைகள் பயன்பாட்டிற்கு வந்தால், பாகிஸ்தானுக்கு செல்லும் நீரின் அளவை முற்றிலுமாக தீர்மானிக்கும் சக்தியாக இந்தியா மாறும் என்பது குறிப்பிடத்தக்கது.
















