தமிழகத்தில் காங்கிரஸை பலப்படுத்த ஆட்சியில் பங்கு கேட்பது அவசியம் என
காங்கிரஸ் தரவு பகுப்பாய்வு பிரிவு தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் 60 ஆண்டுகளாக காங்கிரஸ் பலவீனமாக உள்ளதாக தெரிவித்தார்.
தமிழகத்தில் காங்கிரஸை பலப்படுத்த ஆட்சியில் பங்கு அவசியம் என்றும், கட்சியை பலப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டதாகவும் அவர் கூறினார்.
அதற்காகவே கூடுதல் சீட் மற்றும் ஆட்சியில் பங்கு கேட்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த அதிக எண்ணிக்கையில் தேர்தலில் போட்டியிடுவது அவசியம் என்றும், மக்கள் விஜய்யை நடிகராக பார்க்கவில்லை எனறும், அவர் அரசியல் சக்தியாக மாறிவிட்டார் என்றும் தெரிவித்தார்.
. தொண்டர்கள் கோரிக்கைகள் வைக்கலாம் எனறும், கூட்டணி குறித்து காங்கிரஸ் தலைமைதான் முடிவு செய்யும் என்றும் அவர் கூறினார்.
விஜய்யை சந்திப்பதில் என்ன தவறு உள்ளது? என்றும் தனிப்பட்ட முறையில் சந்தித்ததாகவும் அவர் தெரிவித்தார்.
















