கரூரில் ஜோதிமணி எம்பியிடம் தொகுதிக்கு என்ன செய்தீர்கள் என கேட்டவரை காங்கிரஸ் கட்சியினர் தாக்கியுள்ளதற்கு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில், தொகுதி பிரச்சனைகள் குறித்து கேள்வி கேட்ட ஒவ்வொரு குடிமகனுக்கு உரிமை உள்ளதாகவும், ஆனால் பதிலளிக்காமல் மிரட்டல் விடுப்பது தோல்வியை ஒப்புகொள்வதற்கு சமம் என தெரிவித்துள்ளார்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் 150 நாட்கள் வேலை வழங்குவோம் என திமுக தேர்தல் வாக்குறுதி அளித்ததுதது. ஆனால் அதனை நிறைவேற்றாமல் உங்கள் கூட்டணி கட்சியை தடுத்து எது? என்பதை எங்கள் தமிழக மக்கள் தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள் என திமுக கூட்டணி கட்சிகளை அவர் வினவியுள்ளார்.
இந்த கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல் ஏன் ஓடுகிறீர்கள் ? இந்த மக்களையும் நீங்கள் குடிகாரர்கள் என்று முத்திரை குத்துவீர்களா? என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த 6 ஆண்டுகளாக கேள்விகளிலிருந்து ஓடுவது மட்டும்தான் நீங்கள் செய்திருக்கிறீர்கள். உங்களைப் போலல்லாமல், உங்களைப் போன்ற விஷம சக்திகளால் பரப்பப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு நான் பதிலளித்திருக்கிறேன், அவற்றிலிருந்து ஓடி ஒளியவில்லை என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
















