தமிழகத்தில் வழக்கமான தன்னார்வ சேவைகளை மேற்கொள்ள உகந்த சூழலை ஏற்படுத்தித் தர வேண்டுமென ஆர்எஸ்எஸ் அமைப்பினர் ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் மனு அளித்தனர்.
தேசமே முதன்மை என்ற கருத்தை முன்னிறுத்தி கடந்த 100 ஆண்டுகளாக ஆர்எஸ்எஸ் அமைப்பு மக்களுக்கு சேவை செய்து வருகிறது.
இந்திய அரசியலமைப்பின் படி பிற மாநிலங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தன்னார்வ சேவைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வரும் நிலையில் தமிழகத்தில் மட்டும் அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.
மேலும் அரசியல் சாயம் காரணமாக விசாரணை என்ற பெயரில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் நிர்வாகிகளின் குடும்பத்தினரை அதிகாரிகள் மிரட்டுவதாகவும் தொடர் புகார் எழுந்து வருகிறது.
இந்நிலையில் இதுகுறித்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாநில செயலாளர் ரமேஷ், சென்னை மாநகர தலைவர் சந்திரசேகர் ஆகியோர் ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
















