பிற மொழிகள் கற்று கொள்ள முடியாததற்கு திமுகவே காரணம் என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.
திருப்பூரில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், திருப்பூரில் கேந்திர வித்யாலயா பள்ளி வர தமிழக அரசு அனுமதி தரவில்லை என தெரிவித்தார். தமிழக மக்கள் பிற மொழி அறிவின்றி இருக்க திமுக அரசே காரணம் என்றும் அவர் சாடினார்.
முதலமைச்சர் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவெற்றாமல், நிறைவேற்றிவிட்டதாக கூறுகிறார் என்றும் அவர் கூறினார்.
தேர்வெழுதி 15 ஆண்டுகள் கடந்தும் இடைநிலை ஆசிரியர்களுக்கு வேலை கிடைக்கவில்லை என்றும், எண்ணிக்கை முக்கியமல்ல; எப்படிப்பட்டவர்கள் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதே முக்கியம் என்றும் தெரிவித்தார்
திருப்பூர் ஆட்சி மாற்றம் தரும் ஊர்; திருப்பரங்குன்றம் ஆட்சியை முடிக்கும் ஊர் என்றும் நயினார் நாகேந்திரன் கூறினார்.
















