தமிழகத்தின் பல பகுதிகளில் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் சேலை வழங்கப்படாததால் பொதுமக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மூன்றாயிரம் ரூபாய் ரொக்கத்துடன், சர்க்கரை, கரும்பு, வேட்டி, சேலை அடங்கிய பரிசு தொகுப்பு அறிவிக்கப்பட்டது.. இந்நிலையில் பெரும்பாலான ரேஷன் கடைகளில் சேலை வழங்கப்படுவதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனால் ஏமாற்றம் அடைந்த மக்கள் கடை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இருந்தபோதும், தற்போது வரை முறையாக பதிலளிக்காத ஊழியர்கள் சேலையை தவிர்த்து எஞ்சிய பொருட்களை மட்டுமே வழங்கி வருகின்றனர்.
பொங்கல் தொகுப்பில் அறிவிக்கப்பட்ட சேலை முறையாக விநியோகிக்கப்படாதது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இதனிடையே பொங்கல் பரிசுத்தொகுப்பு பெறும் கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது
சென்னை கோவை திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் வசிப்பவர்கள் ஜனவரி 15 ம் தேதி பொங்கல் அன்று தான் சொந்த ஊருக்கு செல்வார்கள் என்றும், எனவே அவர்கள் வாங்க ஏதுவாக பொங்கல் பரிசு தொகை மற்றும் தொகுப்பை வழங்கும் கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.
















