குண்டர் படையையும் போலி வழக்குகளையும் பாஜக கண்டு அஞ்சாது என மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்,
அவர் விடுத்துள்ள பதிவில், மூன்று நாட்களுக்கு முன், @News18TamilNadu
விவாத மேடையில் எதிர் கருத்துகளை முன்வைத்ததற்கு தமிழக பாஜக இளைஞரணித் தலைவர் சகோதரர் எஸ்ஜி. சூர்யா மீது குண்டர்களை வைத்துத் தாக்குதல் நடத்திய திமுக, நேற்று தமிழக பாஜக இளைஞரணி செயற்குழு உறுப்பினரான லால் பிரசாத் நாயுடு அவர்களைக் கைது செய்ததோடு, தற்போது G1 வேப்பேரி காவல் நிலையத்தில் . SG சூர்யா மீது போலி வழக்குகளைப் பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சியினரை முடக்கி, தனது தவறுகளை மறைக்கும் குறிக்கோளுடன் ரௌடிகள் முதல் தங்கள் ஏவல்துறையாக செயல்படும் காவல்துறை வரை அனைத்து அஸ்திரங்களையும் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது மக்கள் விரோத அறிவாலய
அரசு என அவர் கூறியுள்ளார்.
உலகத் தலைவர்கள் வரிசையில் மிக உயரிய நிலையில் இருக்கக் கூடிய பிரதமர் திரு. மோடிக்கு கொலைமிரட்டல் விடுத்த திமுகவினரைக் கண்டிக்காமல், இதுபோன்று ஜனநாயகப் படுகொலை செய்வது அராஜகத்தின் உச்சம் என்றும் அவர் கூறியுள்ளார். அறவழியில் போராடி மக்கள் சக்தி எனும் பெருந்துணை கொண்டு தமிழக பாஜகவின் தாமரைப் படை இந்த பாசிச திமுக அரசை வீழ்த்தியே தீரும் என்றும் அவர் கூறியுள்ளார்.
















