தவெக தலைவர் விஜய், சிபிஐ விசாரணைக்கு ஆஜராவதற்காக, தனி விமானத்தில் டெல்லி சென்று வர, 40 லட்சம் ரூபாய் வரை செலவு செய்துள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.
முக்கிய பிரமுகர்கள், நடிகர்கள், அரசியல்வாதிகள், பாதுகாப்பு மற்றும் பிற காரணங்களுக்காக தனி விமானத்தில் பயணம் செய்கின்றனர்,
இந்த விமானத்தில் , உணவருந்தும் அறை, ஓய்வறை என பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன. இந்தநிலையில் கரூர் துயர சம்பவம் தொடர்பான வழக்கில் சிபிஐ விசாரணைக்காக தவெக தலைவர் விஜய் தனி விமானம் மூலம் டெல்லி சென்றார்,
இதற்காக அவர் 40 லட்சம் ரூபாய் வரை செலவு செய்திருக்கலாம் என விமான போக்குவரத்து துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன,
















