2026ல் தமிழகத்தில் தூய்மையான, நேர்மையான வளர்ச்சிமிக்க கூட்டணி அமைந்துள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் வரும் 23ஆம் தேதி என்டிஏ கூட்டணி சார்பில் கூட்டணி அறிவிப்பு பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.
இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கவுள்ள நிலையில், பொதுக்கூட்ட திடலை மத்திய இணையமைச்சர் எல்.முருகன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், தேசிய ஜனநாயக கூட்டணி அறிவிப்பு பொதுக்கூட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்க உள்ளதாக தெரிவித்தார்.
மேலும், 2026ல் தமிழகத்தில் தூய்மையான, நேர்மையான வளர்ச்சி மிக்க கூட்டணி அமைந்துள்ளதாகவும் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்
















