பிரதமர் மோடி தலைமையிலான நல்லாட்சிக்கு மும்பை மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளதாக முதலமைச்சர் தேவேந்திர ஃபட்நாவிஸ் தெரிவித்துள்ளார்.
மும்பை மாநகராட்சி தேர்தலில் பாஜக கூட்டணி மகத்தான வெற்றியை பெற்ற நிலையில், பாஜக அலுவலகத்தில் மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர ஃபட்நாவிஸ் வெற்றி உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், மும்பை மாநகராட்சியில் ராஜ் தாக்கரே, உத்தவ் தாக்கரேவின் சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளதாக தெரிவித்தார்.
வளர்ச்சி அரசியலை மும்பை மக்கள் விரும்புவது தேர்தல் முடிவுகள் மூலம் தெரிய வந்துள்ளதாக குறிப்பிட்ட ஃபட்நாவிஸ், மும்பை மாநகராட்சி தேர்தலில் கிடைத்த வெற்றியின் மூலம் பாஜகவுக்கு பொறுப்பு மென்மேலும் அதிகரித்திருப்பதாக கூறினார்.
















