பிஹார் மாநிலத்தின் சாலைப் போக்குவரத்துத்துறை அமைச்சராகவும் பாஜகவின் சத்தீஸ்கர் மாநிலத் தேர்தல் பொறுப்பாளராகவும் திகழ்ந்த 45 வயதேயான திரு. நிதின் நபின் அவர்கள் பாஜகவின் தேசியத் தலைவராக ஏகோபித்த ஆதரவுடன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
மிக இளம் வயதிலேயே தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கி, கடந்த 20 ஆண்டுகளாகக் கட்சிப் பணிகளில் அர்ப்பணிப்புடன் முழுமையாகத் தம்மை ஈடுபடுத்திக் கொண்டு திறம்படச் செயலாற்றி, இளைஞர் அணி தேசியச் செயலாளர் பதவி உட்பட பல்வேறு பொறுப்புகளை வகித்து, படிப்படியாக முன்னேறியவர் திரு. நிதின் நபின் அவர்கள்.
சத்தீஸ்கர் மாநிலத் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டபோது. சீரிய பணியாற்றி, பாஜகவை அமோகமாக வெற்றி பெற வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், 2006, 2010, 2015. 2020 மற்றும் 2025 ஆகிய சட்ட சபைத் தேர்தல்களில் தொடர்ந்து வெற்றி பெற்று, 45 வயதில் 5 முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பிஹார் மக்களின் பேராதரவை என்றும் தன்னகத்தே கொண்ட பெருமைக்குரியவர்.
உலகின் மிகப்பெரும் உறுப்பினர்களைக் கொண்ட கட்சியை வழிநடத்தும் தலைமைப் பதவிக்கு, திரு. நிதின் நபின் அவர்களைப் போன்ற திறம்மிக்க இளந்தலைவரைத் தேர்ந்தெடுத்து, இளைஞர்கள் மீதான தனது நம்பிக்கையை பாஜக மீண்டும் அழுத்தமாக உறுதிப்படுத்தியுள்ளது.
மக்கள் நலனுக்காக அர்ப்பணிப்போடு செயல்படுவோரை வயது வித்தியாசமின்றி தலைமை பொறுப்பில் அமர்த்தி அழகு பார்க்கும் ஜனநாயகக் கட்சியின் ஓர் அங்கமாக நானும் திகழ்வதில் மனதில் பெருமிதம் பொங்குகிறது.
















