மதுரையில் டீ வாங்க சென்றபோது மனவளர்ச்சி குன்றிய இளம்பெண் காணாமல்போன புகாரில் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காமல் அலைக்கழிப்பதாக தாய் குற்றம்சாட்டியுள்ளார்.
நெல்லையைச் சேர்ந்த மகேஸ்வரி என்பவருக்கு 4 பிள்ளைகள் உள்ள நிலையில், இதில் ஒரு பெண், ஒரு ஆண் பிள்ளை மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளாக உள்ளனர்.
2 ஆண்டுகளுக்கு முன்பு மகேஸ்வரிக்கு மதுரையில் தூய்மை பணி கிடைத்ததால், கூடல்புதூர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து குடும்பத்துடன் வசித்து வந்தார்.
45 நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட கணவர் ஆறுமுகம் பண்டிதர் உயிரிழந்த நிலையில், கடந்த 14ஆம் தேதி டீ வாங்க சென்ற மகேஸ்வரியின் மனவளர்ச்சி குன்றிய மகள் காணாமல்போய் உள்ளார்.
இது தொடர்பாக கூடல்புதூர் காவல்நிலையத்தில் சிசிடிவி காட்சியுடன் தாய் மகேஸ்வரி புகார் அளித்துள்ளார்.