கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் தவெக நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்த நகர காவல் ஆய்வாளர் மணிவண்ணன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பரப்புரை நடத்தினார். அப்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியான நிலையில் பலரும் காயமடைந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் தவெக நிர்வாகிகள் மீது கரூர் நகர காவல் ஆய்வாளர் மணிவண்ணன் வழக்குப்பதிவு செய்தார்.
அன்மையில் 59 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில் மணிவண்ணன் உட்பட 18 பேரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டார்.
















