தமிழகத்தில் மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சியை உருவாக்குவோம் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்
எங்களுக்குள் இருந்தது குடும்ப பிரச்னை; மனஸ்தாபம் நீங்கிவிட்டது
தமிழகத்தில் மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சியை உருவாக்குவோம்
நாங்கள் எல்லாம் எம்ஜிஆர் வழிவந்தவர்கள்; ஜெயலலிதாவின் தொண்டர்கள்
மனதில் இருந்த கோப தாபங்களை எல்லாம் விட்டுவிட்டோம்
எங்களுக்குள் சண்டை சச்சரவு இருந்தது உண்மை; ஆனால் தமிழக நலன், அமமுக நலன் கருதி முடிவு எடுத்துள்ளோம்
திமுக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வராமல் விடமாட்டோம்
நாங்கள் எல்லாம் ஜெயலலிதாவின் தொண்டர்கள் என்பதை எதிரிகள் மறந்துவிட்டார்கள்
பங்காளி சண்டையை மறந்து, மக்கள் நலனுக்காக கூட்டணியில் முழு மனதோடு இணைந்துள்ளோம் என டிடிவி தினகரன் கூறியுள்ளார்
















