மதுராந்தகத்தில் NDA கூட்டணியின் எழுச்சியை பார்த்து முதலமைச்சர் ஸ்டாலின் ஆடிப்போய் விட்டதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், அடிமேல் அடி வைத்தால் அம்மி கூட நகரும் ஆனால், நான்கரை ஆண்டுகளாக ஒரு அடி கூட நகராதது திமுக ஆட்சி என்றும், ஓடாத ஓட்டை என்ஜின் ஆட்சியை நடத்தும் பொம்மை முதலமைச்சர் ஸ்டாலின், NDA கூட்டணியை பற்றி பேசுவதெல்லாம் வேடிக்கையின் உச்சம் எனவும் தெரிவித்துள்ளார்.
மதுரை மெட்ரோ எங்கே? கோவை மெட்ரோ எங்கே?” என கேட்கும் திமுக, எதற்காவது ஒழுங்கான ஆவணங்களை சமர்ப்பித்ததா? என கேள்வி எழுப்பியுள்ள எடப்பாடி பழனிசாமி, திமுகவிற்கு 39 எம்.பி.க்களை கொடுத்த தமிழக மக்களுக்கு எதுவுமே செய்யாமல் தாங்கள் நடத்திய FraudModel திமுகஆட்சி-யைக் கண்ட பிறகு, எத்தனை தகிடுத்தத்தங்கள் போட்டாலும், இனி தமிழகம் ஏமாறாது என விமர்சித்துள்ளார்
மேலும், குடும்பம், ஊழல், மக்களின் பாதுகாப்பை சீர்குலைத்த விடியா ஆட்சியை விரட்டி அடிக்க வேண்டும் என்பது தான் தமிழக மக்களின் ஒருமித்த எண்ணம் எனவும் பதிவிட்டுள்ளார்.
















