இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையே கையெழுத்தாகியுள்ள தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் வரலாற்று சிறப்பு மிக்க ஒரு மைல்கல் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், இந்தியாவின் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரக் கனவை நனவாக்கும் வகையில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தத்தைக் கொண்டுவந்த பிரதமர் மோடிக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.
இந்த ஒப்பந்தத்தால் ஒப்பந்தத்தால் ஜவுளி, தோல் பொருட்கள், காலணிகள், மின்னணு சாதனங்கள் உள்ளிட்ட பொருட்கள் தமிழகத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்படுவது எளிதாகும் எனவும் நயினார் நாகேந்திரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
















