5 மாநில சட்டப்பேரவை தேர்தல் குறித்து பிப்ரவரி 4,5ம் தேதிகளில் தேர்தல் ஆணையம் ஆலோசனை மேற்கொள்ள உள்ளது.
தமிழ்நாடு, மேற்கு வங்கம், அசாம், கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் அந்த மாநிலங்களில் தேர்தல் ஆணையத்தின் தரப்பில் மேற்பார்வையாளர்களாக பணியாற்றவுள்ள அதிகாரிகளுக்கு வழங்கப்பட வேண்டிய அறிவுறுத்தல்கள் தொடர்பாக முக்கிய ஆலோசனை கூட்டம் பிப்ரவரி 4,5ம் தேதிகளில் டெல்லியில் நடைபெறவுள்ளது.
அதற்கான அழைப்பை இந்திய தேர்தல் ஆணையமானது அந்ததந்த மாநிலங்களுக்கு அனுப்பியுள்ளது.
தேர்தல் நடைபெறவுள்ள 5 மாநிலங்களின் உள்துறை செயலர்கள் மட்டுமல்லாமல், 15 ஐஏஎஸ் அதிகாரிகளும், 10 ஐபிஎஸ் அதிகாரிகளும் தேர்வு செய்யப்பட்டு ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
















