கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாப சுவாமி கோயிலில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள 5-வது மற்றும் கடைசி டி20 போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய கிரிக்கெட் அணியினர் திருவனந்தபுரத்திற்கு சென்றுள்ளனர்.
போட்டிக்கு முன்னதாக திருவனந்தபுரத்தில் உள்ள புகழ்பெற்ற பத்மநாப சுவாமி கோயிலில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
வீரர்கள் கோயிலுக்கு வருவதை அறிந்த நூற்றுக்கணக்கான ரசிகர்கள், கோயில் வளாகத்தில் திரண்டனர்.
பாரம்பரிய உடையான வேட்டி அணிந்து வழிபட்ட இந்திய கிரிக்கெட் வீரர்கள் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.
















