அரசியல் கட்சிகளின் ரோடு ஷோ தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தவெக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகள், அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் உள்ளதாகவும் இதனால் பதிவு செய்யப்பட்டு அங்கீகாரம் பெறாத கட்சிகள் பாதிக்கப்படும் சூழல் உள்ளதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவெக இணை பொதுச்செயலாளர் நிர்மல்குமார் தாக்கல் செய்த மனு, விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
















