அசாம் மாநிலத்தை காங்கிரஸ் கட்சி ஊடுருவல்காரர்களின் மையமாக மாற்றிய நிலையில், பாஜக அரசு ஊடுருவல்காரர்களிடமிருந்து ஒரு லட்சத்து 26 ஆயிரம் ஹெக்டேர் நிலத்தை மீட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
அசாம் மாநிலம் திப்ரூகரில் சுமார் 825 கோடி ரூபாய் மதிப்பிலான ஐந்து முக்கிய வளர்ச்சித் திட்டங்களை உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார்.
குறிப்பாக, திப்ரூகரில் அசாம் மாநிலத்தின் இரண்டாவது சட்டமன்ற வளாகம் அமைப்பதற்கும் அமித்ஷா அடிக்கல் நாட்டினார்.
பின்னர், தேமாஜியில் நடைபெற்ற பொதுக்கூட்ட மேடையில் பேசிய அவர், அறிவிப்புகள் முந்தைய காங்கிரஸ் ஆட்சியை போல் காகிதத்தோடு மட்டுமே நின்றுவிடாமல், தற்போதைய அரசு வாக்குறுதிகளை செயலில் காட்டுவதாக குறிப்பிட்டார்.
மேலும், அசாம் மாநிலத்தில் ஊடுருவல்காரர்களை பயன்படுத்தி, தங்களது வாக்கு வங்கியை காங்கிரஸ் கட்சி உயர்த்திக் கொண்டதாக குற்றம்சாட்டிய அமித்ஷா, அசாமில் இருந்து ஒவ்வொரு ஊடுருவல்காரர்களையும் வெளியேற்றுவதே பாஜகவின் இலக்கு என்றும் திட்டவட்டமாகக் கூறினார்.
















