தாம்பரம் அடுத்த சேலையூர் பகுதியில் தனியார் கல்லூரியில் 3ஆம் ஆண்டும் பயின்று வரும் மாணவியின் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
கேரள மாநிலம், கோட்டயத்தில் உள்ள பிரபல நிதி நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வரும் நிலையில், சென்னை அடுத்த தாம்பரம் அடுத்த சேலையூரில் தங்கியுள்ள நிறுவன உரிமையாளர் மகள் வீட்டிலும் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
சேலையூர் உள்ள தனியார் கல்லூரியில் 3ஆம் ஆண்டு பயிலும் மாணவியின் வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
பரத்வாஜ் தெருவில் உள்ள வீட்டில் துப்பாக்கி ஏந்திய சிஆர்பிஎப் போலீசாரின் பாதுகாப்புடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
















