போர் திணிக்கப்பட்டாலும், அணுசக்தி செறிவூட்டலை கைவிட மாட்டோம் என்று ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
டெஹ்ரானில் இதுகுறித்து பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் அராக்சி, யுரேனியம் செறிவூட்டல் என்பது தங்கள் உரிமை என்றும், இதற்காக ஏற்கனவே நாங்கள் பெரும் விலையை கொடுத்துவிட்டோம் எனவும் கூறியுள்ளார். அமெரிக்காவின் ராணுவ குவிப்பை கண்டு தாங்கள் பயப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
















