தோழமையில், மக்கள் பணியில் பங்கு கேட்டால் அது எப்படி சதியாகும் என, காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் திமுகவுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற முதமைச்சர் ஸ்டாலின், ஆட்சியில் பங்கு எனும் வாதம் தமிழகத்துக்கு சரிப்பட்டு வராது என்றும், இது அவர்களுக்கும் தெரியும், தங்களுக்கும் தெரியும் எனவும் கூறியிருந்தார்.
இதன் காரணமாக திமுக- காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்பியுமான மாணிக்கம் தாகூர், தோழமையில் மக்கள் பணியில் பங்கு கேட்டால் அது எப்படி சதியாகும் என தனது எக்ஸ் வலைதளத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் கூட்டணி ஆட்சியா? அல்லது ஒரு கட்சி ஆட்சியா? என்பதை மக்கள் முடிவு செய்வார்கள் என அவர் ஏற்கெனவே பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
















