மதுரையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டம் மாநாடு போல் நடைபெறும் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
மதுரை மண்டேலா நகரில் மார்ச் ஒன்றாம் தேதி நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.
இதற்காக பந்தக்கால் நடும் விழா பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் நடைபெற்றது.
இதில் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜு உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன், தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டம் மாநாடு போல் நடைபெறும் என தெரிவித்தார்.
















