டெல்லியில், செயற்கை நுண்ணறிவு ஏஐ தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார்.
புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் கவனம் செலுத்தி வரும் ஏஐ மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
சுகாதாரம், சைபர் பாதுகாப்பு, விண்வெளி மற்றும் பிற துறைகளில் இந்த நிறுவனங்கள் முக்கிய பங்காற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
















