உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டுமென கூட்டணி கட்சிகளுக்கு திமுக அழுத்தம் கொடுப்பதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,பிரதமர் மோடியை வரவேற்க முதலமைச்சர் ஸ்டாலின் வராதது ஏன்? என கேள்வி எழுப்பினார்.
தமிழ் கலாசாரத்தையும், பண்பாட்டையும் ஸ்டாலின்தான் அழிக்கிறார் என்றும், தமிழ்நாட்டில் நிச்சயம் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றும் தமிழிசை கூறினார்.
















