ஆரம்ப சுகாதார நிலையத்தையே ஆக்கிரமித்த திமுக நிர்வாகி - அண்ணாமலை கடும் கண்டனம்!
Jun 21, 2026, 02:31 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆரம்ப சுகாதார நிலையத்தையே ஆக்கிரமித்த திமுக நிர்வாகி – அண்ணாமலை கடும் கண்டனம்!

Manikandan by Manikandan
Mar 9, 2026, 12:58 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆரம்ப சுகாதார நிலையத்தையே ஆக்கிரமிக்கும் அளவுக்குத்  திமுக நிர்வாகிக்கு துணிச்சல் எங்கிருந்து வந்தது அண்ணாமலை கேள்வியெழுப்பியுள்ளார்

இது குறித்து அவர் வெளியிட்ட பதிவில் கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட வடவள்ளி 36-வது வார்டு பகுதியில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை, வடவள்ளி பகுதி திமுக பொறியாளர் அணி துணை அமைப்பாளர் ஷ்யாம் சுந்தர் என்ற நபர், தனது வீடாக மாற்றி, குடும்பத்துடன் வசித்து வருகிறார் என்ற செய்தி, திமுகவின் அதிகார துஷ்பிரயோகத்தின் உச்சத்தைக் காட்டுகிறது என கூறினார்

தமிழகம் முழுவதும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் தான், ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் உயிர் காக்கும் அரணாகத் திகழ்கின்றனஎனவும் மகப்பேறு முதல் அவசர சிகிச்சை வரை மக்கள் இவற்றைத்தான் நம்பியிருக்கின்றனர் என தெரிவித்தார்

இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தையே ஆக்கிரமிக்கும் அளவுக்குத் துணிச்சல் ஒரு சாதாரண திமுக நிர்வாகிக்கு வருமானால், அவரது பின்னணியில், திமுகவின் முக்கியத் தலைவர்கள் நிச்சயம் இருக்கிறார்கள் என்பதே பொருள் என கூறினார்

தமிழகம் முழுவதும், அடிப்படை வசதிகள் எதுவுமின்றி அரசு மருத்துமனைகள் திண்டாடிக் கொண்டிருக்கும்போது, அதனைக் கண்டுகொள்ளாமல், துணை முதலமைச்சர் திரு உதயநிதி பிறந்த நாளையே ஐந்து ஆண்டுகளாகக் கொண்டாடிக் கொண்டிருக்கும் சுகாதாரத்துறை அமைச்சர் திரு மா.சுப்பிரமணியன் அவர்கள், இதற்கு என்ன பதில் கூறப் போகிறார்? என கேள்வியெழுப்பியுள்ளார்

கடந்த 2011 ஆம் ஆண்டு, நில அபகரிப்பு தடுப்பு பிரிவு என்று ஒரு புதிய துறையையே தொடங்கும் அளவுக்கு, மறைந்த திமுக முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்கள் ஆட்சிக்காலமான 2006 – 2011 காலகட்டத்தில், திமுகவினர் நில அபகரிப்பில் ஈடுபட்டதை தமிழக மக்கள் அறிவார்கள். அவரது மகன் முதலமைச்சர் திரு
ஸ்டாலின் ஆட்சியில், இன்னும் ஒரு படி மேல் சென்று, அரசுக்குச் சொந்தமான கட்டிடத்தையே ஆக்கிரமிக்கும் அளவுக்குத் திமுகவினர் இறங்கியுள்ளனர் என தெரிவித்தார்

உடனடியாக, அரசு ஆரம்ப சுகாதார நிலையக் கட்டிடத்தை ஆக்கிரமித்துள்ள திமுக நிர்வாகி ஷ்யாம் சுந்தர் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அந்தக் கட்டிடத்தை மக்கள் பயன்பாட்டுக்கு முழுமையாகக் கொண்டு வர வேண்டும் என்றும், திமுக அரசை வலியுறுத்துகிறேன் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்

Tags: tn bjpmkstalinvadavalliDMK supportersgovtmasubjp annamalaiannamalaiDMKHospital
ShareTweetSendShare
Previous Post

ஈரானின் புதிய உச்ச தலைவர் வெகுநாட்கள் நீடிக்க மாட்டார் – அதிபர் டிரம்ப்!

Next Post

சென்னையில் இரட்டை கொலை – போலீஸ் விசாரணை!

Related News

நாளை நடைபெறும் நீட் மறுதேர்வு; தயார் நிலையில் தேர்வு மையங்கள்

100% உள்நாட்டில் தயாரான உதிரி பாகங்கள் : பிரம்மோஸ் தயாரிப்பில் இந்தியா சாதனை – சிறப்பு தொகுப்பு!

மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்!

நெல்லையப்பர் கோயில் ஆனி தேரோட்ட விழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

குடியரசு தலைவர் திரெளபதி முர்மு பிறந்த நாள் – முதல்வர் விஜய் ,நயினார் நாகேந்திரன், எல்.முருகன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

கும்பகோணம் அருகே மழையில் நனைந்து வீணாகும் ஒன்றரை லட்சம் நெல் மூட்டைகள்!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

உத்திரமேரூர் அருகே அரசுப்பள்ளி வகுப்பறையில் முதல்வர் விஜய் படம் மாட்டி ரீல்ஸ் எடுத்த தவெகவினர் – அண்ணாமலை கண்டனம்!

“ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ்” பெயரில் போலி இணையதளம் தொடங்கி பக்தர்களிடம் மோசடி – குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிரம்!

நெல்லை மாவட்டத்தில் 18 நாட்களில் 17 போக்சோ வழக்குகள் பதிவு – நயினார் நாகேந்திரன்

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்த நாள் – பிரதமர் மோடி வாழ்த்து!

மண்ணச்சநல்லூர் அருகே டாஸ்மாக் கடைகயை மூட வலியுறுத்தி பெண்கள் போராட்டம்!

5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் – அண்ணாமலை

உலகக்கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மொராக்கோ அணிகள் வெற்றி!

கோயில் நிதியில் இருந்து திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள் கட்டுவதற்கான அனுமதி ரத்து – அறநிலையத்துறை நடவடிக்கை!

மேகதாது தீர்மானத்தில் நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற உதயநிதியின் கோரிக்கை சேர்ப்பு – இபிஎஸ் கடும் எதிர்ப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies