தவெக தலைவர் விஜயை பாஜக மிரட்டுவதாகக் கூறுவது முற்றிலும் ஆதாரமற்றவை என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
மதுரை பழங்காநத்தம் பகுதியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரஜினிகாந்த் ஒரு சித்த புருஷர்; அவரை விமர்சித்த ஆதவ் அர்ஜுனாவை தவெக தலைவர் விஜய் ஏன் கண்டிக்கவில்லை? என கேள்வி எழுப்பினார்.
NDA கூட்டணிக்குள் புதிய கட்சி வருகிறதா என்பதைப் பொறுத்திருந்து பாருங்கள் என்றும் அவர் கூறினார்.
கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் 1,977 கொலைகள் நடந்துள்ளதாகவும், போதைப்பொருள் புழக்கம் தமிழகத்தில் மிக அதிகமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அதிகார பலம் மற்றும் பண பலத்தைக் காட்டி உதயநிதியை முதல்வராக்க திமுக துடிக்கிறது என்றும் அவர் கூறினார்.
















