சென்னை அண்ணா பல்கலைக்கழக பேராசியர் மீது மாணவி ஒருவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் பாலியல் புகார் அளித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் பேராசிரியர் ஞானவேல் பாபு என்பவர், தனக்கு 3 ஆண்டுகளாக பாலியல் தொந்தரவு அளித்ததாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மாணவி ஒருவர் புகார் மனு அளித்துள்ளார்.
மனுவில் பேராசிரியர் ஞானவேல்பாபு, தன்னிடம் தொடர்ந்து ஆபாசமாக பேசுவதாகவும், இரவு நேரத்தில் செல்போனில் ஆபாசமான குறுஞ்செய்திகளை அனுப்பி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தன்னை போன்று பல மாணவிகளுக்கு அவர் பாலியல் தொந்தரவு அளித்ததாக அவர் புகார் அளித்துள்ளார்.
இந்த மனுவை பெற்றுக் கொண்ட மாநகர காவல் ஆணையர் அருண், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
இதனையடுத்து அபிராமபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
















