திமுகவை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்பதே தேசிய ஜனநாயக கூட்டணியின் முக்கிய இலக்கு என மத்திய அமைச்சரும், அவிநாசி தொகுதியின் பாஜக வேட்பாளருமான எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழ் ஜனம் தொலைக்காட்சி Social meidia head ஆனந்த் T பிரசாத்திற்கு பிரத்யேக பேட்டியளித்த அவர், திமுக எம்.பி ஆ.ராசாவை மிகப்பெரிய ஊழல்வாதியாக மட்டுமே தமிழக மக்கள் பார்க்கின்றனர் என்றும், திமுகவையும், ஊழலையும் யாராலும் பிரிக்க முடியாதது; அதனை மக்கள் நன்கு அறிவார்கள் என்றும் கூறினார்.
கருணாநிதி தொடங்கி திமுகவின் அடிமட்ட தொண்டர்கள் வரை ஊழல் நெருக்கமானது என்றும், ஆ.ராசாவின் ஆடியோ விவகாரத்தை திமுக தலைவர்கள் ஒருவர் கூட மறுக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
கடும் விலைவாசி உயர்வால் திமுகவை பொதுமக்கள் ஓட ஓட விரட்டியடிக்க உள்ளதாகவும் எல்.முருகன் குறிப்பிட்டார்.
















