தமிழகத்தில் ஆட்சி மாற்றம் தேவை என்று தமிழக மக்கள் முடிவு செய்துவிட்டதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
திருவாரூரில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசிய அவர், அதிமுகவை உடைக்க வேண்டும் என்ற திமுகவின் எண்ணம் தூள்தூளாகிவிட்டது என்றும், அதிமுகவை அழிக்க நினைத்தால், அழிந்து போவார்கள்; இது தொண்டர்களின் இயக்கம் என்றும் கூறினார்.
விவசாயிகளை பற்றி கவலைப்படாதவர் முதலமைச்சர் ஸ்டாலின் என்றும் விவசாயிகள் படும் கஷ்டங்கள் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தெரியுமா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
முளைத்த நெல் மணிகளை தட்டில் கொண்டுவரச் செய்த பார்வையிட்டவர் ஸ்டாலின் என்றும் இபிஎஸ் குறிப்பிட்டார்.
















