இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஈரானுடன் எந்த ஒப்பந்தமும் ஏற்படவில்லை என அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஈரானியர்கள் எங்கள் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்வதற்குத் தயாராக இருக்கும் ஒரு நிலையை எங்களால் எட்டவே முடியவில்லை என தெரிவித்தார்.
தாங்கள் மிகவும் மிகுந்த இணக்கத்துடனும் நடந்துகொண்டதாகவும் அவர் கூறினார். நம்பிக்கையுடன் ஒப்பந்தத்தை எட்டுவதற்கு உங்களால் இயன்ற மிகச்சிறந்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என ட்ரம்பு அறிவுறுத்தி இருந்ததாகவும் அவர் கூறினார். துரதிர்ஷ்டவசமாக, எங்களால் எவ்வித முன்னேற்றத்தையும் எட்ட இயலவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். அமெரிக்காவின் நிபந்தனையை ஈரான் ஏற்கவில்லை என்றும் அவர் கூறினார்.
















