பதிப்பாளரும், மேடை பேச்சாளருமான பத்ரி சேஷாத்ரியை இன்று தமிழக காவல்துறை கைது. இந்நிலையில், பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரி கைதுக்கு தமிழக பாஜக மாநில தலைவர் கு. அண்ணாமலை கண்டனம் தெரிவித்து ட்விட்டர் பதிவிட்டுள்ளார்.
புகழ்பெற்ற பதிப்பாளர், மேடைப் பேச்சாளர் திரு @bseshadri அவர்களை தமிழக காவல்துறை இன்று அதிகாலை கைது செய்துள்ளதை @BJP4TamilNadu வன்மையாகக் கண்டிக்கிறது.
சாமானிய மக்களின் கருத்துக்களை எதிர்கொள்ள திராணியற்று கைது நடவடிக்கையை மட்டுமே நம்பி இருக்கிறது இந்த ஊழல் திமுக அரசு.
ஊழல்…
— K.Annamalai (@annamalai_k) July 29, 2023
இது குறித்து வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,
புகழ்பெற்ற பதிப்பாளர், மேடை பேச்சாளர் பத்ரி சேஷாத்ரியை தமிழக காவல்துறை இன்று அதிகாலை கைது செய்துள்ளதை தமிழக பாஜக வன்மையாக கண்டிக்கிறது. சாமானிய மக்களின் கருத்துகளை எதிர்கொள்ள திராணியற்று கைது நடவடிக்கையை மட்டுமே நம்பி இருக்கிறது இந்த ஊழல் திமுக அரசு.
ஊழல் திமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கைகளை செயல்படுத்துவது ஒன்று மட்டும் தான் தமிழக காவல்துறையின் பணியா?’ என கேள்வி எழுப்பியுள்ளார்.