எத்தனை கட்சிகள் கூட்டணி அமைத்தாலும் மீண்டும் மோடி தான் பிரதமர்: அமித்ஷா உறுதி!
Aug 21, 2025, 02:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

எத்தனை கட்சிகள் கூட்டணி அமைத்தாலும் மீண்டும் மோடி தான் பிரதமர்: அமித்ஷா உறுதி!

அறுதி பெரும்பான்மையுடன் மீண்டும் நரேந்திர மோடி தான் பிரதமராவார் என்று நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டம்.

Web Desk by Web Desk
Aug 3, 2023, 05:47 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடந்த 20-ம் தேதி தொடங்கிய நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடர் மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுப்பட்டதால் 11 வது நாளான இன்று மக்களவை  கூடியதும்  ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட மசோதாக்கள் மீதான விவாதம் நடைப்பெற்றது.

டெல்லி அதிகாரிகள் நியமனம் தொடர்பான மசோதா மீது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கமளித்து பேசுகையில், “புதிதாக உருவாக்கப்பட்ட ‘இந்தியா’ கூட்டணி பற்றி யோசிக்கும் முன்பு, எதிர்க்கட்சிகள் தலைநகர் டெல்லியை பற்றி கவலைப்பட வேண்டும். தலைநகர் டெல்லியில் எந்தவொரு பிரச்னையிலும் சட்டங்களை இயற்ற நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் இருக்கிறது என்று உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது. ஆகவே, தலைநகருக்கான சட்டங்களைக் கொண்டு வரும் அதிகாரம் மத்திய அரசுக்கு இருக்கிறது.

கடந்த 2015-ம் ஆண்டில் டெல்லியில் ஒரு கட்சி ஆட்சிக்கு வந்தது. அவர்களுக்கு எதற்கெடுத்தாலும் போராடுவது மட்டுமே நோக்கம். மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்பது அவர்களின் நோக்கமல்ல. இங்கு நடக்கும் ஊழல்களை மறைக்க லஞ்ச ஒழிப்புத் துறையைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும் என்பதே நோக்கம்.

2015-ம் ஆண்டு இவர்கள் ஆட்சிக்கு வரும் வரை டெல்லி பல்வேறு அரசுகளின் கீழ் இருந்துள்ளது. அப்போதெல்லாம் டெல்லி நிர்வாகம் சுமுகமாகவே செயல்பட்டது. ஜவஹர்லால் நேரு, சர்தார் வல்லபாய் படேல், இராஜாஜி, ராஜேந்திர பிரசாத் மற்றும் அம்பேத்கர் போன்ற தலைவர்களும் கூட டெல்லிக்கு முழு மாநில அந்தஸ்து தரும் யோசனைக்கு எதிராகவே இருந்தனர், என்பதை நான் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

நீங்கள் கூட்டணியில் இருப்பதால் மட்டும், டெல்லியில் நடக்கும் அனைத்து ஊழலுக்கும் ஆதரவளிக்க வேண்டாம் என்று அனைத்து கட்சிகளுக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன். நீங்கள் என்னதான் கூட்டணி அமைத்தாலும், பிரதமர் மோடி வரும் தேர்தலில் அறுதி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பார் என்றார் அமித்ஷா.

இந்த நிலையில் டெல்லி அதிகாரிகள் நியமன அதிகாரம் தொடர்பான மசோதா கடும் அமளிகளுக்கு இடையில் மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது. இந்த மசோதாவுக்கு பிஜூ ஜனதா தளம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. பாரதிய ராஷ்ட்டிரிய சமிதி, அகில இந்திய மஜ்லிஸ் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. ஆம் ஆத்மி எம்பி சுசில்குமார் ரின்கு ஆவணங்களைக்  கிழித்து சபாநாயகர் இருக்கை நோக்கி வீசியதால் இந்த கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்படுவதாக ஓம்.பிர்லா தெரிவித்தார். டெல்லி அதிகாரிகள் நியமன அதிகாரம் தொடர்பான மசோதா நிறைவேறிய நிலையில் மக்களவை நாளை காலை வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Tags: Amit ShahModibjpparlimentI.N.D.I.ADelhi Billsparliment monsoon session
ShareTweetSendShare
Previous Post

தமிழக எம்.பி.க்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை!

Next Post

சிறந்த பயண அனுபவத்தை கொடுக்கும் வந்தே பாரத் இரயில் – மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

Related News

அம்பலமான ராகுலின் போலி முகம் : சொல்வதெல்லாம் பொய் தொட்டதெல்லாம் தோல்வி!

சீனாவுன்னு ஒரு நியாயம் இந்தியாவுக்கு ஒரு நியாயம் : அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு!

40 மாடி உயரத்தில் ராக்கெட் : இனி விண்வெளியில் இந்தியா தான் ராஜா!

இந்திய பொருட்களை வாங்க தயார் : நேசக்கரம் நீட்டிய ரஷ்யா!

என்ன விலை அழகே : இத்தாலி பிரதமரை வர்ணித்து சர்ச்சையில் சிக்கிய ட்ரம்ப்!

மருத்துவத் துறையில் கலக்கும் மகாராஷ்டிரா!

Load More

அண்மைச் செய்திகள்

பேரிடர் மேலாண்மை – முன்னேறும் மகாராஷ்டிரா!

பரிதவிக்கும் பயனாளர்கள் : அடிப்படை வசதி இல்லாத பாஸ்போர்ட் அலுவலகம்!

பைக் பரிசளித்த ரஷ்ய அதிபர் – வாயடைத்துப்போன அமெரிக்கர்!

யானையுடன் கைகோர்க்கும் டிராகன் : இந்தியாவிற்கான ஏற்றுமதி தடையை நீக்கிய சீனா!

தூய்மைப் பணியாளர்களின் தொடர் போராட்டங்களால் தமிழகம் பற்றி எரிகிறது : நயினார் நாகேந்திரன்

நேரலையில் பகிரங்க மன்னிப்பு கோரிய தேர்தல் ஆய்வாளர் சஞ்சய் குமார்!

என்டிஏ கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பு மனு தாக்கல்!

AI மூலம் மக்களை ஏமாற்றும் திமுக அரசு ஏமாறும் நாள் வெகு தூரமில்லை : நயினார் நாகேந்திரன்

காவலாளி அஜித் குமார் லாக்கப் கொலை வழக்கு : முதற்கட்ட குற்றப்பத்திரிகை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல்!

சீமான் மீது வழக்குப் பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies