கேலோ இந்தியா ஜூனியர் மகளிர் ஹாக்கி போட்டியின் லீக் 3-வது தொடரில் 13 அணிகளுக்கான முதல் கட்டப் போட்டி நேற்று (ஆகஸ்ட் 13) தொடங்கி 2023 ஆகஸ்ட் 22 வரை நடக்கும். 2வது கட்ட போட்டி ஆகஸ்ட் 24 தொட ங்கி செப்டம்பர் 2 வரை நடக்கவுள்ளது.
நிகழ்ச்சியின் தலைமை விருந்தினராக அர்ஜுனா விருது வென்றவரும் 1972 ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றவருமான அசோக் தயான்சந்த் கலந்து கொண்டார். மேலும் இந்திய விளையாட்டு ஆணைய நிர்வாக இயக்குனர் ஸ்ரீமதி சுஸ்மிதா.ஆர்.ஜோத்சி, முன்னாள் ஹாக்கி ஒலிம்பிக் வீரர் வினீத் குமார், ஹாக்கி உயர்செயல்திறன் இயக்குனர் பியூஷ் குமார் துபே, பொது செயலாளர் மகேஷ் தயாள், டெல்லி ஹாக்கி வீரர் பிரிதம் சிவாச் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இது பற்றி அசோக் தயான்சந்த் கூறியதாவது,
“இந்தப் போட்டி இளம் விளையாட்டு வீரர்களுக்குச் சரியான தளமாக அமையும். குறிப்பாக சப்-ஜூனியர் மற்றும் ஜூனியர் குழுவில் உள்ள மகளிர், தங்களின் திறமையை வெளி கொணர முடியும். இதன் மூலம் திறமையான வீரர்களைத் தேர்வு செய்ய ஏதுவாக அமையும். அவர்கள் இந்திய ஹாக்கி அணிகளுக்குத் தேர்வு செய்யப்படுவார்கள்.
இந்த கேலோ இந்தியா மகளிர் போட்டியின் முக்கிய நோக்கம், உள்நாட்டுப் போட்டிகளின் அமைப்பு மற்றும் திறமையை அடையாளம் காண்பது ஆகும். மேலும், விளையாட்டு வீராங்கனைகள் போட்டியிடுவதற்கும், விளையாட்டில் ஆர்வம் இல்லாதவர்களுக்கு தங்களை ஈடுபடுத்தவும் இது நுழைவு வாயிலாக அமையும்.” என தெரிவித்தார்.