நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய சந்திரயான் – 3 விண்கலம் அனுப்பப்பட்டுள்ளது.
நிலவிற்கும் சந்திரயான் – 3 விண்கலத்திற்கும் இடையிலான தூரம் 3வது முறையாக குறைக்கப்பட்டது. அடுத்த கட்டமான தூரம் குறைப்பு ஆகஸ்டு16ம் தேதி காலை 8:30 மணிக்கு நிகழ்த்தப்பட உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக, சந்திரயான் -3 விண்கலத்தை 610 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு மையம் உருவாக்கியது.
சந்திரயான் -3 விண்கலம், கடந்த, ஜூலை 14ல் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் ஏவுதளத்திலிருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
செலுத்தப்பட்ட 16 நிமிடங்களில், புவி சுற்றி வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. பின்னர் படிப்படியாக புவியின் ஐந்து சுற்று வட்ட பாதைகளை முடித்துக் கொண்டு சந்திரயான் -3 விண்கலம், கடந்த 5ம் தேதி நிலவு சுற்று வட்டப் பாதையை வெற்றிகரமாக அடைந்தது. இதைத் தொடர்ந்து, நிலவு சுற்று வட்டப்பாதையில் விண்கலம் பயணித்து வருகிறது.
Chandrayaan-3 Mission:
Orbit circularisation phase commencesPrecise maneuvre performed today has achieved a near-circular orbit of 150 km x 177 km
The next operation is planned for August 16, 2023, around 0830 Hrs. IST pic.twitter.com/LlU6oCcOOb
— ISRO (@isro) August 14, 2023
நிலவை மிக அருகில் நெருங்க, சந்திராயன் -3 சுற்று வட்டப் பாதையில், அடுத்த நிலைக்கு, இன்று வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. இது குறித்து இஸ்ரோ தனது X (ட்விட்டர்) பதிவில்,
இன்று நிகழ்த்தப்பட்ட துல்லியமான நடவடிக்கையால், சந்திராயன் -3 விண்கலம் 150 கிமீ x 177 கிமீ சுற்றுவட்டப் பாதையை அடைந்துள்ளது.
அடுத்த நகர்வு ஆகஸ்ட் 16ம் தேதி காலை சுமார் 8.30 மணிக்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்திரயான்-3 நிலவில் தரையிறக்கும் நடவடிக்கையாக,
வரும், 23ம் தேதி சந்திராயன் -3
விண்கலம் சுமந்து சென்றுள்ள, ‘லேண்டர்’ எனப்படும் தரையிறங்கும் சாதனத்திலிருந்து நிலவில் தரையிறக்கப்பட உள்ளது. லேண்டர் சாதனத்துக்குள் உள்ள, ‘ரோவர்’ எனப்படும் வாகனம், நிலவின் மேற்பரப்பில் சுற்றி வந்து ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளது.